என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் சாலை விபத்தில் இறந்தவரின் இதயம் நடுரோட்டில் துடித்த சோகம்
    X

    திருச்சியில் சாலை விபத்தில் இறந்தவரின் இதயம் நடுரோட்டில் துடித்த சோகம்

    • திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர் பெரியார் சிலை அருகே வந்தபோது பின்னால் செங்கல் லோடு ஏற்றி வந்த லாரிமோதியது.
    • மேலும் உடல் சிதறியதில் அவரது இதயம் சாலையின் நடுவே விழுந்து திரைப்படத்தில் வரும் காட்சி போல் அவரது இதயம் துடித்தது

    திருவெறும்பூர்

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் வடிவேல் (40) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி பணி முடிந்து இரவு வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

    திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர் பெரியார் சிலை அருகே வந்தபோது பின்னால் செங்கல் லோடு ஏற்றி வந்த லாரிமோதியது.

    இதில் வடிவேல் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். லாரியின் சக்கரம் வடிவேல் மீது ஏறி இறங்கியது. இதில் வடிவேல் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடல் சிதறியதில் அவரது இதயம் சாலையின் நடுவே விழுந்து திரைப்படத்தில் வரும் காட்சி போல் அவரது இதயம் துடித்தது. நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த மணி என்பவரது மகன் மகேந்திரன் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×