என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாட்டரி டிக்கெட் விற்ற 2 பேர் கைது
- திருச்சி ஸ்ரீரங்கம் பழைய இ.பி. அலுவலகம் பின்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடப்பதாக தகவல் வெளியானது
- வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் (51), பாலக்கரையை சேர்ந்த குணசேகரன் (52) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி :
திருச்சி ஸ்ரீரங்கம் பழைய இ.பி. அலுவலகம் பின்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடப்பதாக தகவல் வெளியானது. அந்த தகவலின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் காவல் துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அங்கு வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் (51), பாலக்கரையை சேர்ந்த குணசேகரன் (52) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் 11 எண்ணிக்கையிலும், ஒரு செல்போன் மற்றும் ரூ. 5000 ரொக்கம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story