search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையில் பொதுமக்கள் பாதுகாப்பாக  இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் -  ஆடியோ வெளியிட்டு கலெக்டர் அறிவுரை
    X

    மழையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் - ஆடியோ வெளியிட்டு கலெக்டர் அறிவுரை

    • பொதுமக்களும் மாணவர்களும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    • இந்த காலகட்டத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

    திருச்சி,

    மழையின் காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கலெக்டர் மா.பிரதீப் குமார் விடுமுறை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் வணக்கம். நான் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பேசுகிறேன். இன்று 11-11-22 திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து கொண்டிருப்பதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நான் விடுமுறை அறிவித்துள்ளேன்.

    பொதுமக்களும் மாணவர்களும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த காலகட்டத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே சிறார்களும், மாணவர்களும் பொதுமக்களும் மிகவும் கவனமாக சாலையைக் கடக்க வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சில நேரங்களில் மின்னலின் தாக்கமும் இருக்கக்கூடும்.

    எனவே திறந்த வெளி மற்றும் விவசாய நிலங்களில் விவசாயிகளும், பொதுமக்களும் இருப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய மாவட்டத்தில் மழையின் அளவு அதிகமாக இருக்கிற காரணத்தினால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.அதனால் சிறார்களும் மாணவர்களும் அதில் இறங்க வேண்டாம். பெற்றோர்கள் அவர்களை அனுமதிக்க வேண்டாம். நீர் நிலைகளில் இறங்கி எந்த ஒரு விபத்தும் நேரா வண்ணம் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    இந்த மழைக்காலத்தில் எந்த ஒரு விபத்தும் நிகழாத வண்ணம் திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம் என கூறியுள்ளார்.

    கலெக்டரின் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.

    மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் நெஞ்சில் நிறுத்தி அவர் பேசி இருக்கும் ஆடியோ அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

    Next Story
    ×