search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பக்கரையில் வன உயிரினங்களை காப்பது குறித்து பயிற்சி
    X

    முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    கும்பக்கரையில் வன உயிரினங்களை காப்பது குறித்து பயிற்சி

    •  வனத்துறை அலுவலர்களுக்கான வனத் தீ தடுப்பு, வன உயிரினங்களை காப்பது, தீ வருமுன் காப்பது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • இந்த முகாமில் வன பகுதியில் ஏற்படும் தீயினை எவ்வாறு அணைப்பது, தீ ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றப்பட்டது.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி பகுதியில் வனத்துறை அலுவலர்களுக்கான வனத் தீ தடுப்பு, வன உயிரினங்களை காப்பது, தீ வருமுன் காப்பது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் திலிப் தலைமை தாங்கினார். தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட்ராஜா முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் வனச்சரக அலுவலர் இன்பசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த முகாமில் வன பகுதியில் ஏற்படும் தீயினை எவ்வாறு அணைப்பது, தீ ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றப்பட்டது.

    இதில், கொடைக்கானல் வன உயிரின சரணாலயம் கோட்டத்திற்கு உட்பட்ட கொடைக்கானல் வனசரக அலுவலர் சிவகுமார், பெரும்பள்ளம் வனசரக அலுவலர் குமேரசன், பேரிச்சம் வனசரக அலுவலர் சுரேஷ்குமார், பழனி வனசரக அலுவலர் பழனிக்குமார் , மன்னவனூர் வனசரக அலுவலர் ஞான சேகரன் மற்றும் வனவர் ராமசாமி, விவேகானந்தன், பூவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வனகாப்பாளர், வன காவலர்கள் , வேட்டை தடுப்பு காவலர்கள், சூழல் சுற்றுலா காவலர்கள் என ஏராளமான வனத்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×