search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் விவசாயிகளுக்கு பயிற்சி
    X

    கோத்தகிரியில் விவசாயிகளுக்கு பயிற்சி

    • வேளாண்மை எந்திரங்கள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
    • 70-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    அரவேணு

    கோத்தகிரி வட்டார தோட்டக்கலை துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட கிராமம் கேசலடாவில் வேளாண்மை எந்திரங்கள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சிக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை தாங்கினார். கோவை மாவட்ட விதை சான்றளிப்பு துறை அலுவலர் கலந்து கொண்டு விதை சான்றளிப்பு முறைகள் குறித்து விளக்கினர். துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

    முன்னாடி விவசாயி கிருஷ்ணன் நவீன வேளாண்மை எந்திரங்கள் மற்றும் பண்ணை கருவிகளின் முக்கியத்துவம் குறித்து பண்ணை எந்திரங்களின் செயல்பாடுகளில் செயல்முறை விளக்கம் அளித்தார். கிஷான் கிராப்ட் நிறுவனத்தின் நிர்வாகி பகவதி ராஜ் பண்ணை கருவிகளின் பராமரிப்பு முறைகள் குறித்து விளக்கினார்.

    ஆட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் தொழில் நுட்ப பயிற்சிகள் மற்றும் செயல்முறை விளக்கம் குறித்து விளக்கினார். உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் துரை வரவேற்றார். செயலர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். 70-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    Next Story
    ×