search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி
    X

    நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.

    கம்பத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி

    • விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கான நிதி குறித்து விவசாயிகளுக்கான விளக்க கூட்டம் கம்பம் தோட்டக்கலை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
    • கம்பம் சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.

    கம்பம்:

    கம்பம் வட்டார தோட்டக்கலை மலைப்பயி ர்கள்துறை மற்றும் ஹெச்.டி.எப்.சி வங்கி இணைந்து விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கான நிதி குறித்து விவசாயிகளுக்கான விளக்க கூட்டம் கம்பம் தோட்டக்கலை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    தோட்டக்கலை அலுவலர் பழனிவேல்ராஜன் தொடங்கி வைத்து பேசி னார். விவசாய உள்கட்டமை ப்புக்கு தேவைப்படும் கடனுதவி மற்றும் மானிய விபரங்களும், குறிப்பாக ரூ.17.5 லட்சம் 35 சதவீத மானியத்தில் ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை, விவசாயிகளுக்கு தேவை யான எந்திரங்கள் கொள்முதல், அறுவடை பின்செய் நேர்த்தி கட்ட மைப்புகளுக்கான கடனுதவி மற்றும் மானிய விபரங்கள் தொடர்பாக விளக்கங்களை தோட்டக்கலை துறை சார்பாகவும் வங்கி அலுவலர்கள் சார்பாகவும் விளக்கி கூறப்பட்டது.

    அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திட்டங்கள் சார்ந்த தொழில்நுட்பங்களும், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் தக்காளி, மிளகாய், மா, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி, தென்னைக்கு ஊடுபயிராக கொக்கோ, அத்தி கன்றுகள் மானியத்தி லும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கொட்டைமுந்திரி மற்றும் முருங்கை கன்றுகள் மானியத்திலும், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் காய்கறி விதை கள் மானியத்தில் வழங்குவது குறித்து விவசாயிகளுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் பாண்டியராணா விளக்கி கூறினார்.

    இக்கூட்டத்தில் ஹெச்.டி.எப்.சி வங்கி மண்டல விவசாய முதன்மை அலுவலர் ஷியாம் சுந்தர ரெட்டி, வங்கி மேலாளர்கள் தினேஷ், பாலமுரளி மற்றும் கம்பம் சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடு களை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் விவேகா னந்தன், சுதாகர் செய்தி ருந்தனர்.

    Next Story
    ×