search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி முகாம்
    X

    பயிற்சி முகாம் நடந்தது.

    உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி முகாம்

    • முகாமில் பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
    • பயிற்சியில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், உணவு பாதுகாப்பு மேற்பார்வை யாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமைதாங்கினார்.

    தனியார் பயிற்சி நிறுவனத்தைச் சார்ந்த கார்த்திக் நாகப்பட்டினம் நகரம் மற்றும் வட்டாரத்தில் ஹோட்டல், இனிப்பகம் மற்றும் பேக்கரியில் பணிபுரிபவர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி வழங்கினார்.

    நாகப்பட்டினம் நகர ஹோட்டல், தேநீர் மற்றும் இனிபக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் இரா.முருகையன் மற்றும் நாகூர் நகர வர்த்தகர் சங்க நிர்வாகி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உணவு தயாரிப்பின் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், தரமான மூலப்பொருட்களை பயன்படுத்துவது, தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை பாது காப்பாக வைத்திருப்பது, பரிமாறுவது உட்பட அனைத்து உணவு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

    பின்னர் பங்கேற்பாளர்கள் சந்தேகங்க ளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் 80-க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்றனர்.

    முடிவில் கீழ்வேளூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆண்டனிபிரபு நன்றி கூறினார்.

    Next Story
    ×