என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகனஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்
- போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைபிடித்து ஓட்ட வேண்டும்,
- போக்குவரத்து விதிகளை கடைபிடித்து ஓட்ட தொடங்கி விட்டனர்.
கோத்தகிரி,
புதிய போக்குவரத்து சட்டத்தால் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்த அபராத தொகை அதிகரிப்பு குறித்து பலரும் பல கருத்துகளை கூறி வந்த நிலையில் அதிகப்படியான வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கும் போது ஏதேனும் அபராதம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே போக்குவரத்து விதிகளை தற்சமயம் கடைபிடித்து ஓட்ட தொடங்கி விட்டனர்.
இந்த போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைபிடித்து ஓட்ட வேண்டும், அப்படி ஓட்டுவதால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படும் நன்மை குறித்து கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜான் மற்றும் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story






