search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம், வானூர் பகுதியில் போக்குவரத்து அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கை
    X

    திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

    திண்டிவனம், வானூர் பகுதியில் போக்குவரத்து அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கை

    • வாகன தணிக்கையில் ஈடுபட்டு அபராதம் விதித்து வருகின்றனர்.
    • 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், வானூர் ஆகிய இடங்களில் திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன், ஆய்வாளர்கள் சுந்தர் ராஜன், விஜய் முருகவேல் ஆகியோர் வாகன தணிக்கை யில் ஈடுபட்டு அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டிவனம், வானூர் போன்ற பகுதிகளில் அதிக பாரம், அதிக பயணிகள் ஏற்றியதற்கும், சாலை வரி போன்ற பல்வேறு விதிமுறைகளில் ஈடுபட்ட 403 வாகனங்களுக்கு ரூ.19 லட்சத்து 21 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் 62 வாகனங்களை திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள், பள்ளி கல்லூரி மாண வர்களில் 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்ய செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்த னர்.

    Next Story
    ×