என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டமங்கலம் ரெயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
    X

     போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்வதை படத்தில் காணலாம்.

    கண்டமங்கலம் ரெயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் பாதிப்பு

    • கண்டமங்கலம் ெரயில்வே மேம்பாலம், அரியூர், எம்.என்.குப்பம் ஆகிய 7 இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • வாகன ஓட்டிகளும் மணிக்கணக்கில் காத்திருந்து சாலையில் ஊர்ந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

    விழுப்புரம்:

    கிருஷ்ணகிரி - நாகப்பட்டினம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலை விரிவாக்க பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இதனால் புதுச்சேரி விழுப்புரம் இடையே தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கெங்கராம் பாளையத்திலிருந்து எம்.என்.குப்பம் வரையிலான புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கெங்கராம்பாளையம், மதகடிப்பட்டு, திருபுவனை, திருவாண்டார்கோயில், கண்டமங்கலம் ெரயில்வே மேம்பாலம், அரியூர், எம்.என்.குப்பம் ஆகிய 7 இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று கண்டமங்கலம் ெரயில்வே மேம்பால பணி நடக்கும் இடத்தில் குறுகிய சாலையில் ஜே.சி.பி. எந்திரம் பெரிய பள்ளம் தோண்டியதால் இன்று காலை முதல் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலம் ெரயில்வே கேட் பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. காலை முதல் பஸ், லாரி, கார், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் சாலையில் வரிசையாக நின்று கொண்டிருப்பதால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மணிக்கணக்கில் காத்திருந்து சாலையில் ஊர்ந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    Next Story
    ×