search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருட்களை விற்கும் வணிகர்களுக்கு ஆதரவு கிடையாது- வணிகர் சங்க பேரமைப்பு
    X

    வணிகர்களுக்கு நல வாரிய அட்டைகளை மாவட்ட தலைவர் சுப்பு என்கிற சுப்ரமணியன் வழங்கினார்.

    புகையிலை பொருட்களை விற்கும் வணிகர்களுக்கு ஆதரவு கிடையாது- வணிகர் சங்க பேரமைப்பு

    • வணிகர் சங்க பேரமைப்பு மேற்கொண்ட முயற்சியால் தற்போது சீல் வைக்கப்பட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
    • விழிப்புணர்வு விளம்பர அட்டை ஒவ்வொரு கடையிலும் மாட்டி வைப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்துள்ள திருக்கண்டியூர் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு கூட்டம் நடந்தது.

    இதில் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு தஞ்சை மாவட்ட தலைவர் கே.பி சுப்பு என்கிற சுப்ரமணியன் தலைமை வகித்து பேசியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக பூட்டியி ருந்த கடைகள் உள்பட 109 கடைகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    வணி கர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் கலெட்டர் அலுவலகத்தில் சந்தித்து பேசினோம்.

    வணிகர் சங்க பேரமைப்பு மேற்கொண்ட முயற்சியால் தற்போது சீல் வைக்கப்பட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

    இதற்காக தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    வணிகர்கள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்ய கூடாது.

    அதையும் மீறி யாரேனும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து அதிகாரிகளிடம் பிடிபட்டால் அவர்களுக்கு வணிகர் சங்க பேரமைப்பு உதவி புரியாது.

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வணிகர்களிடம் கொடுத்து விற்பனை செய்ய சொல்ப வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வணிகர்களின் நலனுக்காக மாநில தலைவர் விக்கிரம ராஜா சுகாதார துறை அதிகாரிகளை சென்னையில் சந்தித்து பேசி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட கூடுதல் செயலா ளர்கள் தாமரைச்செல்வன், தியாக சுந்தரமூர்த்தி ஆகி யோர் பேசினர்.

    முன்னதாக பொருளாளர் மைதீன் வரவேற்று பேசினார்.

    இக்கூட்டத்தில் உறுப்பி னர்களுக்கு வணிகர் நல வாரிய கார்டு வழங்கப்பட்டது.

    அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ஹான்ஸ் புகையிலை போன்ற பொருட்கள் விற்பனை செய்வதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் விழிப்புணர்வு விளம்பர அட்டைஒவ்வொரு கடையிலும் மாட்டி வைப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இதில் திருக்கண்டியூர் வணிகர் சங்க செயலாளர் அசோக்குமார், மைதீன், நிஜாம் மைதீன், துணைத்த லைவர் பாண்டியன் உள்பட ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×