search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெருவோர வியாபாரிகள் 6 பேரை தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு- வியாபாரிகள் திரண்டு வந்து ஓட்டு போட்டனர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தெருவோர வியாபாரிகள் 6 பேரை தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு- வியாபாரிகள் திரண்டு வந்து ஓட்டு போட்டனர்

    • தேர்தலில் 53 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 35 ஆயிரத்து 588 பேர் இந்த தேர்தலில் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளனர்.
    • தேர்தலுக்காக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 103 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் தெருவோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்காக 15 பேர் கொண்ட சென்னை நகர விற்பனைக் குழு, சென்னை மாநகராட்சி கமிஷனர் தலைமையில் அமைக்கப்படுகிறது.

    இதில் 6 பேர் தெருவோர வியாபாரிகளில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் இன்று நடைபெற்றது.

    இந்த தேர்தலில் 53 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 35 ஆயிரத்து 588 பேர் இந்த தேர்தலில் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளனர்.

    இந்த தேர்தலுக்காக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 103 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. காலை முதலே வியாபாரிகள் திரண்டு வந்து ஓட்டு போட்டனர்.

    சாலையோர வியாபாரிகள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அசல் சான்றிதழை காண்பித்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.

    திருவொற்றியூர் ஜெய் கோபால் கரோடியா அரசினர் உயர்நிலைப்பள்ளி, மணலி மண்டல அலுவலகம், மாதவரம் ஜெய்கோபால் கரோடியா அரசினர் உயர் நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரவாயல் அரசினர் மேல் நிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் அரசினர் மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட் டிருந்த வாக்குச்சாவடிகளில் நடைப்பாதை வியாபாரிகள் ஆர்வமாக வந்து ஓட்டு போட்டனர்.

    இன்று மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் வாக்கு எண்ணும் மையமான அண்ணாநகர் அம்மா அரங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு அறையில் வேட்பாளர்கள் முன்னிலையில மூடி சீல் வைக்கப்படும்.

    நாளை (28-ந்தேதி) காலை 9 மணிக்கு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    Next Story
    ×