என் மலர்
உள்ளூர் செய்திகள்

செல்வராஜ் எம்.எல்.ஏ
தீ விபத்தில் பாதித்த வியாபாரிகளுக்கு ரூ. 25 லட்சம் நிதி வழங்கிய செல்வராஜ் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு
- தீ விபத்தில் 50 கடைகள் எரிந்து சேதமடைந்தன.
- க.செல்வராஜூக்கு பாராட்டுக்கள்.
திருப்பூர்,ஜூன்.26-
திருப்பூா் பனியன் பஜாரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்தில் 50 கடைகள் எரிந்து சேதமடைந்தன. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து, திருப்பூா் பெரிய பள்ளிவாசலில் கடை உரிமையாளா்களுடன் இஸ்லாமிய இயக்க நிா்வாகிகள் சந்தித்து பேசினா்.
இந்த சந்திப்புக்கு திருப்பூா் பெரிய பள்ளிவாசல் தலைவா் வி.கே.எம்.ஷாஜகான் தலைமை வகித்தாா். இந்த சந்திப்பில், பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறியதுடன், உடனடியாக தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் வழங்கிய திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் க.செல்வராஜூக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனா்.
மேலும் பக்ரீத் பண்டிகையின்போது அனைத்து பள்ளி வாசல்களில் இருந்து நிதி வசூலித்து பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தனா். தீ விபத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதே இடத்தில் கடை நடத்த அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.
இந்த சந்திப்பில் திருப்பூா் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு நிா்வாகிகள் கலீல் ஹாஜியாா், முகமது யாசா், தஸ்தகீா், வட்டார ஜமாத்துல் உலாமா சபைத்தலைவா் மெளலவி நாசா் சிராஜி ஹஜரத், காதா் பேட்டை பள்ளிவாசல் தலைவா் காதா் ஹாஜியாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.






