search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளக்குறிச்சி ஊராட்சியில் டிராக்டர், பேட்டரியுடன் இயங்ககூடிய குப்பை வாகனம்
    X

    பள்ளக்குறிச்சி ஊராட்சியில் டிராக்டர், பேட்டரியுடன் இயங்ககூடிய குப்பை வாகனம்

    • பள்ளக்குறிச்சி ஊராட்சிக்கு 7 பேட்டரியுடன் இயங்கும் குப்பை வாகனம் மற்றும் 1 டிராக்டர் வழங்கப்பட்டுள்ளது.
    • பள்ளக்குறிச்சி ஊராட்சி தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கி வாகனத்துக்கான சாவியை தூய்மை பணியாளர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டிராக்டர் மற்றும் பேட்டரியுடன் இயங்ககூடிய குப்பைவாக னங்கள் வழங்கப்பட்டு ள்ளன.

    அதன்படி பள்ளக் குறிச்சி ஊராட்சிக்கு 7 பேட்டரியுடன் இயங்கும் குப்பை வாகனம் மற்றும் 1 டிராக்டர் வழங்கப் பட்டுள்ளது. இதையடுத்து பள்ளக்குறிச்சி ஊராட்சி மணிநகரில் மத்திய அரசின் திட்டத்தில் வழங்கப் பட்டுள்ள டிராக்டர் மற்றும் பேட்டரியுடன் இயங்க கூடிய குப்பை வாகனங்கள் மக்கள் பயன்பாட்டிற்க்கு வழங்கும் தொடக்க விழா நடை பெற்றது. பள்ளக்குறிச்சி ஊராட்சி தலைவர் சித்ராங்க தன் தலைமை தாங்கி வாகனத்து க்கான சாவியை தூய்மை பணியாளர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார். ஊராட்சி துணைத் தலைவர் டார்வின் முன்னிலை வகி த்தார். ஊராட்சி செயலர் ராஜேஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் கிராம தூய்மைக்கு வாகன ங்கள் வழங்கிய மத்திய அரசு க்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரி விக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் தனபால், சணமுகா னந்தம், கீதா, நிஷாந்தி, ராஜாத்தியம்மாள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதனையடுத்து தூய்மை இந்தியா திட்டத்தில் தூய் மைப் பணி நடை பெற்றது. இதனை பள்ளக் குறிச்சி ஊராட்சித் தலைவரும், தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவருமான சித்ராங்கதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணைத்தலைவர் எஸ். செல்வராஜ், ஒன்றிய தலை வர் எஸ்.கே. சரவணன், மாவட்ட பிரசார பிரிவு தலைவர் ஏ. மகேஸ்வரன், மாநில இளைஞரணி செயலர் அ. பூபதி பாண்டி யன், மாவட்ட சிறு பான்மை பிரிவு செயலர் ஜெரோம், ஒன்றிய துணைத்தலைவர் நவீன், ஒன்றிய செயலர் குமார வேல், உள்ளிட்ட பா.ஜ.க. பிரமுகர்கள், ஊர் பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×