என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேத்ரின் நீர்வீழ்ச்சியில் ஆபத்தான பகுதிகளுக்கு சென்று புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்
    X

    கேத்ரின் நீர்வீழ்ச்சியில் ஆபத்தான பகுதிகளுக்கு சென்று புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்

    • கோத்தகிரியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளது.
    • அறிவிப்பு பலகை வைத்து சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை காணவும், இயற்கை அழகை கண்டு ரசிக்கவும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

    இந்த பகுதிக்கு செல்லும் பாதை மலைப்பாதையாகும். இதனால் கவனமுடன் செல்ல வனத்துறையினரும் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

    அப்படி வரும் சுற்றுலா பயணிகளில் சிலர், ஆபத்தை உணராமல் ஆபத்தான இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து வருகின்றனர். எனவே இந்த பகுதிகளில் எல்லாம் அறிவிப்பு பலகை வைத்து சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×