என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஞ்சலிங்க அருவியில் 'திடீர்' வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
- அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
- பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரு மூர்த்தி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில் அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் பின்பு இயல்புநிலை திரும்புவதுமாக உள்ளது.
இந்தநிலையில் அருவியின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. விடுமுறை நாளான இன்று அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
Next Story






