search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல்லில் தினசரி தூய்மை பணி மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்
    X

     ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தேங்கி நிற்கும் துணிகள் மற்றும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளதை காணலாம்.

    ஒகேனக்கல்லில் தினசரி தூய்மை பணி மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்

    • ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • நாள்தோறும் தூய்மைப்பணி மேற்கொண்டு தேங்கும் குப்பைகளை அகற்ற, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் ஒகேன க்கல்லுக்கு தினந்தோறும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    சனி, ஞாயிற்றுக்கிழமை களிலும், திருவிழா மற்றும் விடுமுறை நாள்களில் வரும் சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்தும், எண்ணெய் குளியல் செய்தும் மகிழ்கின்றனர்.

    மேலும், உயிரிழந்த வர்களின் உறவினர்கள், நண்பர்கள் அஸ்தியைக் கரைத்து வழிபாடு, சடங்குகள் செய்வதற்காகவும் வருகின்ற னர்.

    இந்நிலையில், சுற்றுலா பயணிகள் தாங்கள் பயன்படுத்தும், சோப்பு மற்றும் காகிதங்கள், பொருள்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் கவர்கள், உணவு தட்டுகள், உடுத்திய ஆடைகள், தண்ணீர் பாட்டில்கள், உணவு பொருள்கள் ஆகியவற்றை குளிக்கும் ஆற்றின் கரைகளி லேயே விட்டு விட்டு சென்று விடுவதால் காவிரி ஆற்றுப்பகுதியிலும் அருவி பகுதியிலும் குப்பைகள் அடித்து வரப்பட்டு குவியல் குவியலாக உள்ளது.

    இவற்றை அகற்ற யாரும் முறையாக நடவடிக்கை மேற்கொள்ளாததால் தேங்கி நிற்கும் தண்ணீர் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரியின் அழகுக்கும் பொலிவுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    கடந்த இரண்டு வருடங்களாக கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக காவிரி கர்நாடகா எல்லை பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் அவ்வப்போது பெய்த கன மழையின் காரணமாக தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர் வரத்து இருந்து வந்ததால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது அடித்துச் செல்லப்பட்டு குப்பை கூளங்கள் இன்றி காணப்பட்டது.

    தற்பொழுது கோடை காலத்திற்கு முன்னதாகவே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது.

    மேலும் ஒகேனக்கல்லில் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவசர நேரத்தில் கரையோ ரங்களையே கழிப்பறையாக பயன்படுத்துவதாலும், ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் வருவதாலும் நாள் கணக்கில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    மீன் அருங்காட்சியகம் நிரந்தரமாக மூடப்பட்டு கால்நடைகளுக்கு மேய்ச்சல் இடமாகவும், நாய்களின் கூடாரமாகவும் மாறி உள்ளது.

    அதேபோல ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இங்கு சுற்றுலா வரும் மதுபான பிரியர்கள் சந்து கடைகளில் விற்பனை ஆகும் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு வந்து ஆற்றின் கரையோரத்தில் மது பானங்களை அருந்தி மது புட்டிகளை ஆற்று பகுதிகளிலும் கரையோர பகுதிகளிலும் உடைத்து விட்டு செல்கின்றனர்.

    அப்படி உடைத்துவிட்டு செல்வதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் நடக்கும் பொழுது காலில் உடைந்த பாட்டில் கண்ணாடியால் காயம் ஏற்படுகின்றன.

    மேலும் நடைபாதை வழியாக மெயின் அருவி, சினி பால்ஸ், தொங்கு பாலம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பொழுது நடைபாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு கம்பி வேலிகள் இல்லாமலும் பராமரிக்காமல் இருப்பதாலும் சுற்றுலா பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் ஏற்பட்டு உள்ளது.

    காவிரி கரை ஓரங்களில் உள்ள கோவில்களில், இந்த தண்ணீரை புனித தீர்த்தமாக பயன் படுத்தி வருகின்றனர்.

    மேலும் 12 மாவட்ட மக்களின், குடிநீர் தேவைக்கா கவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

    எனவே ஒகேனக்கல் காவிரி கரைகளில் நாள்தோறும் தூய்மைப்பணி மேற்கொண்டு தேங்கும் குப்பைகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    Next Story
    ×