என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் இரவில் சுற்றித்திரியும் மாடுகளால் சுற்றுலா வாகன ஓட்டிகள் அவதி
- நகரத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது
- பேரூராட்சி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நகர பகுதி வீதிகளில் நாளுக்கு நாள் மாடுகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் நகரத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் மாடுகளின் கூட்டத்தில் வாகனங்கள் புகுந்து விபத்தை ஏற்படுத்துகிறது. விபத்துகளில் சிக்கி மாடுகளும், வாகன ஓட்டிகளும் உயிரிழந்த சம்பவம் பலமுறை நடந்திருக்கிறது.
இதை தடுக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
Next Story






