என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி பகுதிகளில் நாளை மின்தடை
- வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட நாங்குநேரி துணை மின்நிலையத்தில் நாளை ( 8-ந் தேதி ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- அப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
நெல்லை:
வள்ளியூர் மின்வாரிய செயற்பொறியாளர் வளன்அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட நாங்குநேரி துணை மின்நிலையத்தில் நாளை ( 8-ந் தேதி ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழுர் மற்றும் மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி, ஏ.எம்.ஆர்.எல். தொழிற்கூடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மேலும் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் மின்வாரிய பணியாளர்க ளுக்கு பொது மக்கள் ஒத்து ழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story