search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளி வரத்து குறைவால் விலை அதிகரிப்பு
    X

    பாலக்கோடு மார்க்கெட்டில், வெளிமாநிலத்திற்கு கொண்டு செல்ல பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள தக்காளியை படத்தில் காணலாம்.

    தக்காளி வரத்து குறைவால் விலை அதிகரிப்பு

    • தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மார்கெட்டிற்கு மூன்று மாதங்களுக்கு பிறகு தக்காளி வரத்து குறை வினால் விலை உயர்ந்து கிலோ 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • தக்காளி வரத்து குறைவால் விலை அதிகர்த்துள்ளது. விலை உயர வாய்ப்பு.

    மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, கம்பைநல்லூர். உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வது வழக்கம். இதன் மூலம் சராசரி தினசரி 500 டன் தக்காளி விளைவிக்கப்பட்டது. உள்ளூர் தேவைக்குப்போக தென் மாவட்டங்கள் சென்னை மற்றும் கேரள கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்புவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ 5ரூபாய் முதல் 7ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

    தற்போது தொடர்ந்து சுபமுகூர்த்த தினங்கள், பண்டிகை நாட்கள் வருவதையொட்டி தக்காளியின் விலை உயர்ந்து கிலோ தக்காளி 16 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையாக 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி ஒரு சில மாதங்களில் மட்டுமே விலை உயர்வதால் விவசாயிகள் மாற்று பயிர் செய்வதால் ஆர்வம் காட்டுவதால் தக்காளி சாகுபடி பரப்பு மிகவும் குறைந்துள்ளது. மேலும் தக்காளி விலை உயர்வு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தக்காளி விலை இன்னும் சில வாரங்களில் மேலும் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றன்ரனர்.

    Next Story
    ×