என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ் வருடபிறப்பையொட்டி இன்றுதருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    தமிழ் வருட பிறப்பையொட்டி இன்று தருமபுரி எஸ்.வி. ரோட்டில் உள்ள சாலை விநாயகர் கோவிலிலும், கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழ் வருடபிறப்பையொட்டி இன்றுதருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை 1-ந் தேதி தமிழ் வருடம் பிறப்பையொட்டி தமிழக மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடும் வகையில் கோவில்களுக்கு சென்று பூஜைகள் செய்து வழிபாடு செய்வது வழக்கம்.
    • தமிழ் வருடபிறப்பையொட்டி இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    தருமபுரி, ஏப்.14-

    தருமபுரியில் தமிழ் வருட பிறப்பையொட்டி இன்று அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ் வருட பிறப்பையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் வழிபாடு நடைபெற்றது.

    தருமபுரி கோட்டை கோவில் மல்லிகா அர்ஜுனீஸ்வரர், ஸ்ரீ மங்கலாம்பிகைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் கோட்டை வரலட்சுமி பர வாசுதேவர் பெருமாள் கோவிலில் கரும்பு வாழைப்பழம் அண்ணாச்சி பழம், மாம்பழம், சாத்துக்குடி, ஆப்பிள், ஆரஞ்சு சோலை கதிர் உள்ளிட்ட பலவகை மற்றும் காய்கறி வகையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வரலட்சுமி பர வாசுதேவர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சாமி புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் சிவன் கோயில், ஆட்டுக்காரன்பட்டி ராதா கிருஷ்ணன் கோவில் அதக்கப்பாடி பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து கோவில்களிலும் தமிழ் வருட பிறப்பை யொட்டி சாமிகளுக்கு சிறப்பு அலங்காரமும், ஆராதனையும் நடைபெற்றது. கிருஷ்ணகிரி யில் உள்ள சேலம் ரோடு, சப்-ஜெயில் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள சிவன், முருகன், விநாயகர் கோவில்களில் இன்று அதிகாலையில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    Next Story
    ×