search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற   விவசாயிகள் ஆதாருடன், செல்போன்  எண்ணை இணைக்க அழைப்பு
    X

    கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற விவசாயிகள் ஆதாருடன், செல்போன் எண்ணை இணைக்க அழைப்பு

    • விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் பி.எம் கிசான் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • தங்களது ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் விபரங்களை அருகில் உள்ள பொது சேவை மையத்தில் பி.எம் கிசான் இணையதளத்தில் இ.கே.ஒய்.சி-ல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார விவசாயிகள் பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டம் தொடந்து பெறுதல் தொடர்பாக வேளாண்-உழவர் நலத்துறையின் வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்–குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாட்டில் நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் பி.எம் கிசான் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பரமத்தி வட்டார விவசாயிகள், பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயன் பெற, தங்களது ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் விபரங்களை அருகில் உள்ள பொது சேவை மையத்தில் பி.எம் கிசான் இணையதளத்தில் இ.கே.ஒய்.சி-ல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    அப்போது, செல்வபோனுக்கு வரும் கடவு எண்ணைப் (பாஸ்வோ்டு) பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை பதிவு செய்து

    கொண்டால், விவசாயிகளுக்கு இந்த திட்டம் மூலம் வழங்கப்படும் தவணை தொகை அவா்கள் வங்கிக் கணக்கில் தொடந்து வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×