search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளின் மண் மாதிரிகளுக்கு தனிப்பட்ட குறிப்பு குறியீடு வழங்கல்
    X

    தளிக்கோட்டையில் மண் மாதிரிகளுக்கு குறிப்பு குறியீடு வழங்கும் முகாம் நடைபெற்றது.

    விவசாயிகளின் மண் மாதிரிகளுக்கு தனிப்பட்ட குறிப்பு குறியீடு வழங்கல்

    • ஸ்கேன் செய்து விவரங்கள் மண்வள அட்டை செயலியில் பதிவு செய்யப்படுகிறது.
    • மண் மாதிரிகளின் அறிக்கையினையும் பார்த்துக் கொள்ளலாம்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் வட்டாரம் தளிக்கோட்டை பஞ்சாயத்து 2023- 24 ஆம் நிதி ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு வேளாண் துறை மூலம் இவ்வாண்டு ஒரு சிறப்பு திட்டமாக ஒவ்வொரு மண் மாதிரி தனிப்பட்ட குறிப்பு குறியீடு வழங்கப்பட்டு பெறப்பட்ட மண் மாதிரிகள் குறித்து அனைத்து விபரங்களும் மண்வள அட்டை செயலியில் நேரடியாக பதிவேற்றம் செய்யப்பட்டு மண்மாதிரி பையில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் என வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட குறிப்பு குறியீடு அட்டை ஸ்கேன் செய்து இடப்படுகிறது.

    இதன் மூலம் மண் பரிசோதனை செய்யும் அலுவலர்கள் இந்த தனிப்பட்ட குறிப்பு குறியீட்டினை உரிய கருவி மூலம் ஸ்கேன் செய்து விவரங்கள் மண்வள அட்டை செயலியில் நேரடியாக பதிவு செய்யப்படுகிறது.

    விவசாயிகள் தங்களுடைய செல்போன் எண்ணினை பதிவு செய்தவுடன் அவர்களுடைய மண் மாதிரிக்கான அறிக்கை மற்றும் பரிந்துரைகளை நேரடியாக அவர்களுடைய செல்போனில் பார்த்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே விவசாயிகள் தமிழ்நாடு மண்வள செயலின் மூலம் தங்களுடைய செல்போன் எண் மற்றும் சர்வே எண்ணினை பதிவுசெய்து கடந்த வருடத்தில் வழங்கிய மண் மாதிரிகளின் அறிக்கையினையும் பார்த்துக் கொள்ளலாம்.

    எனவே இவ்வருடம் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆவிக்கோட்டை நெம்மேலி, கன்னியாகுறிச்சி, பெரிய கோட்டை, சொக்கநாவூர், அண்டமி மற்றும் தளிக்கோட்டை கிராம விவசாயிகள் தங்கள் மண் மாதிரிகளை வேளாண் உதவி அலுவலரிடம் தனிப்பட்ட குறிப்பு குறியீட்டுடன் வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்தார்.

    Next Story
    ×