search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி நகருக்கு போக்குவரத்து- குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களை  நியமிக்க வேண்டும்- ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர்  கோரிக்கை
    X

    சீனிவாசன்

    கோவில்பட்டி நகருக்கு போக்குவரத்து- குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களை நியமிக்க வேண்டும்- ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் கோரிக்கை

    • தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் நிறைந்த பகுதியாக கோவில்பட்டி திகழ்கிறது.
    • கோவில்பட்டி நகரில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட் டத்தில் கோவில்பட்டி வளர்ந்து வரும் மிகப் பெரிய நகர மாகும். கோவில் பட்டி நகரில் 36 வார்டுகள் உள்ளன. தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பல்லாயிரக் கண க்கான தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும்.

    கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட மூப்பன்பட்டி, இலுப்பையூரணி, பூசாரிபட்டி, வடக்கு, தெற்கு திட்டக்குளம் மற்றும் மேற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாண்டவ ர்மங்கலம், மந்திதோப்பு, தோணுகால், சாலைப்புதூர், ஆவல்நத்தம், அய்யனேரி, வெங்கடாசலபுரம், புளியங்குளம், பாறைப்பட்டி, கிருஷ்ணா நகர், சுபா நகர், கணேஷ் நகர், ராஜகோபால் நகர், பல்லக்கு ரோடு, சண்முக சிகாமணி நகர் உள்ளிட்ட பகுதி களில் இருந்தும் கோவில்பட்டியை சுற்றி சுமார் 30 கிராம ங்களில் இருந்து தினசரி பல்லாயிரக் கணக்கான பொது மக்கள், வியா பாரிகள், மாணவ மாணவி கள் கோவில்பட்டி நகரு க்குள் வந்து செல்கின்றனர்.

    எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது. கோவில்பட்டி நகரில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். இங்கு காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம், கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம், போக்குவரத்து பிரிவு மகளிர் காவல் நிலையம், மதுவிலக்கு என பல காவல் நிலையங்கள் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களுக்கும் பொது மக்களின் நலன் காத்திடவும், விபத்து மற்றும் குற்றச் செயல்களை தடுத்திடவும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல ர்களின் எண்ணி க்கையை உயர்த்த வேண்டும்.

    பெருகி வரும் வாகன போக்குவரத்தை கணக்கில் கொண்டு போக்குவரத்து காவல் ஆய்வாளரை உடனடியாக நியமிக்க வேண்டும். அதேபோல் சமீப காலங்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே பொதுமக்கள் நலன்கருதி கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின் புதூர், கழுகுமலை, கயத்தார் உள்ளிட்ட காவல் நிலை யஙகளில் குற்றப்பிரி வுக்கென தனி இன்ஸ்பெ க்டர்கள் மற்றும் கோவி ல்பட்டி ஜனத்தொகை எண்ணி க்கை கணக்கில் கொண்டு அதிக காவலர்க ளை நியமிக்க வேண்டும். மேலும் போலீசார் இரவு நேரங்களில் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×