search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்கா- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
    X

    4 இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்கா- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

    • விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
    • கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,500 பணியாளர்கள் தங்கும் வசதிகளுடன் தொழிலாளர் குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்

    சென்னை:

    2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதனால் ஏறத்தாழ 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    மேலும், கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,500 பணியாளர்கள் தங்கும் வசதிகளுடன் தொழிலாளர் குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும். இதனால், பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் இம்மதிப்பீடுகளில் தொழில் துறைக்கு 3,268 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×