என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பெண் தீக்குளித்து தற்கொலை
  X

  கோப்புபடம்

  பெண் தீக்குளித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடும்ப தகராறில் விபரீதம்
  • போலீசார் விசாரணை

  ஆரணி :

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முள்ளிபட்டு ஊராட்சிக்குட்பட்ட கண்ணன் நகர் பகுதியை சேர்ந்த ரவி முள்ளிபட்டு ஊராட்சியில் டேங்க் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

  பகுதிநேரமாக நெசவுத் தொழிலும் செய்து வருகின்றார். ரவிக்கு செல்வி என்ற மனைவியும் நவீன் என்ற மகனும் உள்ளனர்.

  மேலும் நேற்று முன்தினம் இரவு ரவிக்கும் செல்விக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது இதனால் மனவேதனை அடைந்த செல்வி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

  உடல் முழுவதும் தீ பரவியதால் கூச்சலிட்டு அலறினார் அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை செல்வியை மீட்டு தீ காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

  பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

  அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் செல்வி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். செல்வின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

  இச்சம்பவம் குறித்து கணவர் ரவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Next Story
  ×