search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
    X

    பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் கோவிலில் ஆண்டு தோறும் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இன்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து கோவில் பட்டாச்சாரியார்களால் அதிகாலை முதல் ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பரமபதவாசல் வழியாக ஸ்ரீ பாண்டுரங்கன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதையடுத்து ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருப்பாற்கடல் சயன திருக்கோலம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ பாண்டு ரங்கனுக்கு மகா தீபாரா தனை காண்பிக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியை காண வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கண்ணமங்கலம் லட்சுமி நாராயணன் பெருமாள் கோவிலில் அதிகாலை 5.30 மணிஅளவில் சொர்க்க வாசல் வழியாக ஸ்ரீகிருஷ்ணர் கருடவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி நடந்தது.

    இதைமுன்னிட்டு கோயில் வளாகத்தில் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்ப ட்டிருந்தது.ஒண்ணுபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது.

    போளூர் பெருமாள் கோவிலில் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் போளூர் அருகே குன்னத்தூரில் பெருமாள் கோவிலில் அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.

    செங்கம்

    செங்கத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவில் ஒவ்வொரு வருடமும் சொர்க்கவாசல் நடை திறக்கும்ம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும்.

    இந்த வருடமும் இன்று அதிகாலை சொர்க்கவாசல் நடை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேணு கோபால பார்த்தசாரதி திருக்கோவில் பிரகாரத்தில் சொர்க்கவாசல் நடை திறந்து ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி உற்சவர் சுவாமி சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அப்போது பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். செங்கம் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடும் குளிரிலும் பெருமாள் கோவில் வளாகத்தில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இஞ்சிமேடு

    திருவண்ணாமலை, மாவட்டம் இஞ்சிமேடு, கிராமத்தில் உள்ள வரதராஜ, பெருமாள் கோவிலில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதேசி விழா நடந்தது. காலையில் வரதராஜ, பெருமாள் பெருந்தேவி, தாயார் சக்கரத்தாழ்வார், சீதாதேவி, லட்சுமி நரசிம்மர், ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு திருமஞ்சனம் செய்து வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    கோவில் மண்டபத்தில் பல்வேறு வண்ண மலர்களால் சொர்க்கவாசல் போல் அலங்காரம் செய்து வைத்து. பெருந்தேவி, தாயார் சமேத வரதராஜ, பெருமாளுக்கு பல்வேறு பண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைத்து. பாலாஜி, பட்டர் தலைமையில் 11 பட்டர்கள் லட்சதீப ஆராதனை செய்து வைத்து. பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள், ஆண்கள், காலை முதல் நீண்ட வரிசையில் நின்று சொர்க்கவாசல், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரதராஜ, பெருமாள் பெருந்தேவி, தாயாரை சாமி தரிசனம் செய்தனர்.

    அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சடகோப கைங்கரிய சபா நிர்வாகிகள் பாலாஜி, வேங்கடநாதன், பட்டர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×