என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
  X

  திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்
  • குறை தீர்வு கூட்டத்தை புறக்கணித்தனர்

  திருவண்ணாமலை :

  திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீவு நாள் கூட்டம் நடைபெற்றது.

  கூட்டத்திற்கு திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். இதில் தாலுகாவில் உட்பட்ட பல்வேறு பகுதி சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

  அப்போது தனித்தனியாக விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர் இதற்கிடையில் திடீரென கூட்டத்திற்கு பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் வரவில்லை என்று விவசாயிகள் திடீரென கூட்டத்தை புறக்கணித்து அலுவலகம் நுழைவாயில் முன்பு கருப்பு துண்டு அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஆர்ப்பாட்டத்திற்கு நார்த்தாமுண்டி சிவகுமார் தலைமை தாங்கினார். இதில் வழக்கமாக மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமையில் நடைபெறும் தாலுகா அளவிலான விவசாயிகள் கூட்டம் முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் தாலுகா அளவிலான விவசாயிகள் கூட்டத்திற்கு பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் சரிவர வருவதில்லை என்றும் வருவாய் துறை சார்பில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைந்து கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

  இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  Next Story
  ×