என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்
    X

     விழிப்புணர்வு முகாம்

    பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

    • 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாநாராயணன் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.

    மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி கலந்து கொண்டு, கடந்த 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஊராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, துணிப்பை பயன்படுத்த வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும் என வலியுறுத்திப் பேசினார்.

    இதில் துணை தலைவர் மாதவன், வார்டு உறுப்பினர்கள், மக்கள் நல ஒருங்கிணைப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் (பொறுப்பு) ஜானகிராமன் நன்றி கூறினார்.

    Next Story
    ×