search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வன்முறைகள் குறித்து பெண்கள் தைரியமாக புகாா் அளிக்க  வேண்டும் - நீதிபதி அறிவுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    வன்முறைகள் குறித்து பெண்கள் தைரியமாக புகாா் அளிக்க வேண்டும் - நீதிபதி அறிவுறுத்தல்

    • பள்ளிகுழந்தைகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
    • பெண்களின் முக்கியத்துவத்தை ஆண் குழந்தைகளுக்கு உணா்த்த வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழக சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் திருப்பூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சொா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்படி தனியார் பள்ளியில் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

    இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூா் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆதியன் பேசியதாவது:-

    குழந்தைகள்தான் வருங்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள். சமுதாயம் என்பது ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் என அனைவருக்குமானதாகும். பெண்களின் முக்கியத்துவத்தை ஆண் குழந்தைகளுக்கு உணா்த்த வேண்டும். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் வன்முறைகள் குறித்து தைரியமாக புகாா் அளிக்க முன்வர வேண்டும். சமுதாயத்தில் குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் உயா்ந்த நிலைக்குச் செல்ல கல்வியறிவு மட்டுமின்றி அனுபவ அறிவும் அவசியமானதாகும் என்றாா்.

    Next Story
    ×