search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெக்கலூரில் பஸ்கள் நின்று செல்ல நிரந்தர தீர்வு காணப்படுமா?
    X

    கோப்புபடம்.

    தெக்கலூரில் பஸ்கள் நின்று செல்ல நிரந்தர தீர்வு காணப்படுமா?

    • வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு தொடர்ந்து புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை.
    • பஸ்களின் பெர்மிட்டை ரத்து செய்ய வேண்டும்.

    அவினாசி :

    திருப்பூரிலிருந்து ஒரு தனியார் பஸ் கோவை நோக்கி புறப்பட்டது. அதில் ஏறிய ஒரு பயணி தெக்கலூருக்கு டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு பஸ் கண்டக்டர் தெக்கலூரில் பஸ் நிற்காது. எனவே பஸ்சை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த பயணி மறுப்பு தெரிவித்து ஏன் தெக்கலூரில் நிற்காது என்று கேள்வி எழுப்பி யுள்ளார். தொடர்ந்து நான் பஸ்சை விட்டு இறங்க முடியாதுஎன்று கூறியுள்ளார். இதனால் கண்டக்டர்மற்றும் பயணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியே வந்த மற்றொரு தனியார் பஸ் கண்டக்டர் டிரைவர் ஒருவரும் சேர்ந்து கொண்டு பயணியை இறங்குமாறு வற்புறுத்திஅவரை வலுக்கட்டாயமாக பஸ்சில் இருந்து இறக்கி விட்டு ள்ளதாக கூறப்படுகிறது. எனவே இது குறித்து அந்த பயணி தெக்கலூரில் உள்ள தனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தெக்கலூரில் ஒன்று திரண்டு பஸ் பயணியை இறக்கி விட்ட தனியார் பஸ் மற்றும் அதற்கு துணை நின்றதாக கூறப்படும் 2 தனியார் பஸ்களையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அவினாசி போலீசார் சம்பவ இடம் சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இனிமேல் அனைத்துபஸ்களும் தெக்கலூரில்நின்று செல்லும் என்று கூறி பஸ்சை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது பொதுமக்கள் நீண்ட காலமாக இதே நிலைதான் நடக்கிறது. இது பற்றி பலமுறை போராட்டம் நடத்தியும்,வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு தொடர்ந்து புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெக்கலூரில் நிற்காமல் செல்லும் இந்த பஸ்களின் பெர்மிட்டை ரத்து செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்என்று கூறினார்கள். அவர்களிடம் உறு தியாக நடவடிக்கை எடுக்கப்படும்என்று போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர்.

    இதனால் 1 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. தெக்கலூருக்குள் பஸ்கள்செல்வது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினைஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க நிரந்தர தீர்வு காண சம்பந்த ப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்க வேண்டுமெனசமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×