search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளி கோல்டன்நகர் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை  எடுக்கப்படுமா?
    X

    சிதலமடைந்த சாலை.

    ஊத்துக்குளி கோல்டன்நகர் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

    • இங்கு 30,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
    • மழைக்காலங்களில் மழை தண்ணீர் வெள்ளம் போல் தேங்கி காட்சி அளிக்கிறது.

    ஊத்துக்குளி:

    திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் ரோட்டில் பாளையக்காடு உள்ளது. இங்கிருந்து கோல்டன் நகர் செல்லும் பாதையில் ெரயில்வே பாலத்தில் இருந்து ஆர்.எஸ்.புரம், பண்டிட்நகர், எம்.ஜி.ஆர். காலனி, ஆர்.கே.ஜி. நகர், சத்யா காலனி, சூர்யா காலனி ,சஞ்சய் நகர், கருணாபுரி ஆகிய காலனிகள் உள்ளது. இவை அனைத்தும் கோல்டன்நகரை உள்ளடக்கிறது.

    ஆரம்ப காலத்தில் முட்புதர்கள் நிறைந்து தனி காடாக காட்சி அளித்தது. இந்த பகுதிக்குள் மக்கள் குடியேற மிகவும் அச்சப்பட்டனர். இன்று மக்கள் தொகை அதிகம் கொண்ட திருப்பூர் மாநகரில் இதுவும் ஒரு பகுதியாக உருவாகியுள்ளது. சுமார் 30,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் பாளையக்காட்டில் இருந்து கோல்டன் நகர் செல்லும் ரெயில்வே பாலத்தின் கீழ் மழைக்காலங்களில் மழை தண்ணீர் வெள்ளம் போல் தேங்கி காட்சி அளிக்கிறது. இதனால் நடந்து செல்பவர்கள் முதல் வாகனத்தில் செல்பவர்கள் வரை பாதையை கடக்க முடியாமல் நீந்தி செல்ல வேண்டிய அவலம் ஏற்படுகிறது. வயதானவர்கள் வீட்டில் முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

    அவசரத் தேவைக்காக அழைக்கும் ஆம்புலன்ஸ் கோல்டன் நகருக்குள் வருவதில்லை. இதனால் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் கோல்டன் நகரில் உள்ள குடியிருப்புகளின் ரோடுகள் மிகவும் மேடு பள்ளங்களாக காணப்படுகின்றன. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து சம்பந்தப்ட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×