search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
    X

    கோப்புபடம்.

    உடுமலை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

    • ரெயில்களை பயன்படுத்தும் உடுமலை பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
    • 4 லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் ஓராண்டில் வந்து சென்றுள்ளனர்.

    உடுமலை :

    திண்டுக்கல் - பாலக்காடு அகல ெரயில்பாதையில் உடுமலை ரெயில் நிலையம் அமைந்துள்ளது.மதுரை கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த ரெயில் நிலையம் வாயிலாக ஆண்டுதோறும் ெரயில்வேக்கு வருவாய் அதிகரித்து வருகிறது.தற்போது உடுமலை ரெயில் நிலையத்தில் அமிர்தா எக்ஸ்பிரஸ், சென்னை எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் சிறப்பு ரெயில், கோவை - மதுரை உள்ளிட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதில் அனைத்து ெரயில்களையும் பயன்படுத்தும் உடுமலை பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

    அவ்வகையில் தெற்கு ரெயில்வே மதுரை ெரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ரெயில்வே நிலையங்களில் பெறப்பட்ட ஆண்டு வருவாய் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.அதன்படி 2022 - 23ம் ஆண்டில் உடுமலை ரெயில் நிலையம் வாயிலாக 4 கோடியே 18 லட்சத்து 47 ஆயிரத்து 465 ரூபாய் வருவாய் பெறப்பட்டுள்ளது.இந்த நிலையத்திற்கு 4 லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் ஓராண்டில் வந்து சென்றுள்ளனர்.

    மதுரை ரெயில்வே கோட்டத்திலுள்ள 50 ெரயில்வே நிலையங்களில் வருவாய் அடிப்படையில் உடுமலைக்கு 23வது இடம் கிடைத்துள்ளது.கடந்த 2019-20ம் நிதியாண்டில் உடுமலை ரெயில் நிலைய வருவாய் 2.75 கோடியாக இருந்தது. வருவாய் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றினால் பயணிகளும் பயன்பெறுவார்கள். ரெயில்வே நிர்வாகத்துக்கும் வருவாய் அதிகரிக்கும்.குறிப்பாக ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பிடம், ப்ளாட்பார்ம் மேற்கூரை, உணவக வசதி முக்கிய தேவையாக உள்ளது. மேலும் ராமேஸ்வரம் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு சிறப்பு ெரயில்கள் இயக்கலாம். சென்னைக்கு செல்லும் ரெயில்கள் நிரம்பி வழிவதால், கூடுதல் பெட்டிகள் இணைத்தல், விடுமுறை நாட்களில் சிறப்பு ெரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில் உடுமலை ரெயில் நிலையத்தில் சரக்குகளை கையாளும் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும். இதனால், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் உதவியாக இருக்கும்.வருவாயும் கூடுதலாகும். எனவே மதுரை ரெயில்வே கோட்டம் சார்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி நீண்ட காலமாக வலியுறுத்தப்படும் ெரயில்களை இயக்க நடப்பாண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    Next Story
    ×