என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பா.ஜ.க., பெண் நிா்வாகிகளை இழிவுபடுத்தும் வீடியோ - மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார்
- ‘இன்று’ என்ற யூடியூப் சேனலில் பாஜக பெண் நிா்வாகிகளை அவதூறாக சித்தரித்து வீடியோ பதிவிட்டுள்ளனா்.
- அவதூறு வீடியோ பதிவிட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர்:
பாஜக., பெண் நிா்வாகிகளை இழிவுபடுத்தும் வகையில் யூடியூப்., சேனலில் வீடியோ பதிவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபுவிடம் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக., மகளிரணி மாவட்டத் தலைவா் க.ஜெகதீஸ்வரி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
'இன்று' என்ற யூடியூப் சேனலில் பாஜக பெண் நிா்வாகிகளை அவதூறாக சித்தரித்து வீடியோ பதிவிட்டுள்ளனா். இதில், நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாகக்கூறி பாஜக பெண் நிா்வாகிகளை இழிவாக தரம் தாழ்த்திப் பேசியுள்ளனா்.இந்த வீடியோ சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும், அரசியல் கட்சிகளுக்கு இடையில் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் உள்ளது.
எனவே, அவதூறு வீடியோ பதிவிட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மனு அளிக்கும்போது, பாஜக., மகளிரணி மாநிலச் செயலாளா் சுதாமணி, மாவட்ட பொதுச் செயலாளா் ஆனந்தி, மாவட்ட துணைத்தலைவா் சுமதி ஆகியோா் உடனிருந்தனா்.






