search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி.டி.வி.தினகரன் பிறந்தநாள்  குறித்து அ.ம.மு.க.வினர் ஆலோசனை
    X

     ஆலோசனைக்கூட்டத்தில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சி.சண்முகவேலு சிறப்புரையாற்றிபோது எடுக்கபட்ட படம். 

    டி.டி.வி.தினகரன் பிறந்தநாள் குறித்து அ.ம.மு.க.வினர் ஆலோசனை

    • டி.டி.வி. தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
    • 2 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    அ.ம.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சி.சண்முகவேலு சிறப்புரையாற்றினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி சிறப்பித்து பேசினார். டி.டி.வி. தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    டி.டி.வி. தினகரன் பிறந்தநாளான வருகிற 13-ந் தேதி காலை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். கொடிக்கம்பங்கள் அமைத்து கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் கருத்து தெரிவித்தார்கள். பிறந்தநாளன்று காலை பெரிபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில் காலையில் பூஜை நடத்தப்பட்டு 13 பகுதிகளிலும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்க வேண்டும். மதியம் 2 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    மேலும் சுற்றுச்சூழல் பிரிவு சார்பில் 1,500 பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் மராத்தான் போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என மாபெரும் மக்கள் எழுச்சி நாளாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பாலுசாமி, மருத்துவ அணி மாநில துணை செயலாளர் டாக்டர் கிங், துணை செயலாளர் கீதா, பொருளாளர் சேகர், நிர்வாகி புல்லட் ரவி, அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாலகிருஷ்ணன், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் இறைவெங்கடேஷ், அம்மா தொழிற்சங்க பேரவை தலைவர் கலியமூர்த்தி, பகுதி செயலாளர்கள் வீர.கந்தசாமி, ராஜாங்கம், ஜெகதீஷ், நூல்கடை சிவக்குமார், நெருப்பெரிச்சல் நிர்வாகி கந்தசாமி, பாண்டியன் நகர் பகுதி இணை செயலாளர் ஷீபா பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×