என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடப்பட்ட காட்சி.
ஏ.பெரியபாளையம் ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா
- மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
- 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஊத்துக்குளி :
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏ.பெரியபாளையம் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட கவுன்சிலர் சக்திவேல், ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், ப்ளூ லைன் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சாலையோரம் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தீனதயாள், ராஜேஷ் உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






