search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் பொருட்களை பெற வர்த்தக இணையதளம்
    X

    கோப்புபடம்.

    வேளாண் பொருட்களை பெற வர்த்தக இணையதளம்

    • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில்,அக்ரிகார்ட் என்னும் வர்த்தக இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • இணையதளம் வாயிலாக நெல், பயிறு வகை, எண்ணெய் வித்து, இடுபொருட்கள் ஆர்டர் செய்து வீட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில், அக்ரிகார்ட் என்னும் வர்த்தக இணையதளம் அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களை நேரடியாக பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து விவசாயி களின் வருமானத்தை அதிகரிக்கவும், விவசாயிகளு க்கு உற்பத்தி சார்ந்த பொருட்களை எளிதாக கொள்முதல் செய்ய உதவவும், ஆன்லைன் வர்த்தக இணைய தளத்தை வேளாண் பல்கலை க்கழகம் துவங்கியுள்ளது. இந்த இணையதளம் வாயிலாக, நெல், மக்காச்சோளம், பயிறு வகை, எண்ணெய் வித்து, பயிர் பூஸ்டர்கள், இடுபொரு ட்கள் காய்கறி விதைகளை ஆர்டர் செய்து, வீட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம்.

    துணைவேந்தர் கீதால ட்சுமி கூறுகையில், பொது மக்கள், விவசாயிகள் https://www.tnauagricart.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி வேளாண் சார்ந்த பொருட்க ளை பெற்றுக்கொள்ளலாம். முதல்கட்டமாக, 15 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் அறிமுகப்படு த்தப்படும். மதிப்பு கூட்ட ப்பட்ட வேளாண் பொரு ட்களும் விற்பனை பட்டியலில் சேர்க்கப்படும் என்றார்.

    Next Story
    ×