என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் அறிவிப்பு
  X

  கோப்புபடம்

  திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

  பல்லடம்:

  பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாளை 10-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

  மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பொங்கலூா், காட்டூா், தொட்டம்பட்டி, மாதப்பூா், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், கண்டியன்கோயில், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூா், என்.என்.புதூா், வடக்கு அவிநாசிபாளையம், எல்லப்பாளையம்புதூா், காங்கேயம்பாளையம், ஓலப்பாளையம்.

  உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் த.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

  மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பூலாங்கிணறு, அந்தியூா், சடையபாளையம், பாப்பனூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குப்பட்டி, ஆா்.வேலூா், குறிச்சிக்கோட்டை, திருமூா்த்தி நகா், பொன்னாலம்மன் சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென் குமாரபாளையம்.

  திருப்பூர் குமரன் ரோடு துைணமின்நிலையத்துக்குட்பட்ட வாலிபாளையம் மின்பாதையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை அரோமா ஓட்டல் காம்ப–வுண்டு, சாய்பாபா கோவில் பகுதி, யுனிவர்சல் ேராடு ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தெக்கலூர் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட வடுகபாளையம், வினோபா நகர், ராயர்பாளையம், செங்காளிபாளையம், வெள்ளாண்டிபாளையம், சாவக்கட்டுப்பாளையம், சேவூர், குளத்துப்பாளையம், சென்னிஆண்டவர் கோவில், விராலிகாடு, தண்ணீர் பந்தல், திம்மனையம்பாளையம், தண்டுக்காரன் பாளையம், பள்ளக்காடு, வலையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Next Story
  ×