search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மழையால் தக்காளி விலை உயர வாய்ப்பு
    X

    தக்காளி பெட்டி.

    மழையால் தக்காளி விலை உயர வாய்ப்பு

    • 80 ரூபாய்க்கு விலை போன ஒரு பெட்டி தக்காளி தற்போது 400 ரூபாய்க்கு விலை போகிறது.
    • 2 நாட்களுக்கு முன், இடைவிடாது மழை பெய்தது.

    உடுமலை :

    கடந்த ஆடி மாதத்தில் பெய்த தொடர் மழையால், வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி முழுவதும் அழிந்தது. இதனால் 80 ரூபாய்க்கு விலை போன ஒரு பெட்டி தக்காளி தற்போது 400 ரூபாய்க்கு விலை போகிறது.சில்லரை விலையில் கிலோ ரூ. 40 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழை இன்றி வறண்ட வானிலை காணப்பட்டதால் விளைச்சல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டது.இந்நிலையில் 2 நாட்களுக்கு முன், இடைவிடாது மழை பெய்தது. இது பருவமழை காலம் என்பதால் மழை தொடரும் வாய்ப்பு உள்ளது.

    இதனால் தக்காளி அழுகுவது மேலும் அதிகரிக்கும். உற்பத்தி இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் தக்காளி விலை மேலும் மேலும் உயர வாய்ப்புள்ளது. தற்போதைய நிலவரப்படி உடுமலையில் தக்காளி ஒரு பெட்டி ரூபாய் 450 க்கும் சில்லறை விற்பனையில் 30 முதல் 40 வரையும் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் தக்காளி உடுமலையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×