search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் தடகள பயிற்சி மையத்தில் சேர ஆர்வமுள்ளவர்கள் சேரலாம் - விளையாட்டுத்துறை அழைப்பு
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாவட்டத்தில் தடகள பயிற்சி மையத்தில் சேர ஆர்வமுள்ளவர்கள் சேரலாம் - விளையாட்டுத்துறை அழைப்பு

    • பயிற்சியில் பதினைந்து முதல், 30 வீரர், வீராங்கனையர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • பள்ளி, கல்லூரிகளில் பயிலும், 12 முதல், 18 வயதுடைய வீரர், வீராங்கனையர் பங்கேற்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உருவாக உள்ள தடகள பயிற்சி மையத்தில், சேர ஆர்வமுள்ளவர்களுக்கு, மாவட்ட விளையாட்டு த்துறை அழைப்பு விடுத்து ள்ளது.

    இது குறித்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் அறிக்கை:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா (கேலோ இந்தியா) திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் தடகள பயிற்சி மையம் அமைய உள்ளது. தடகள வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    அவ்வகையில், திருப்பூர் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு வீரர், வீராங்கனை தேர்வு, அதற்கான பயிற்சி முகாம், மார்ச், 10ம் தேதி, சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. பயிற்சியில் பதினைந்து முதல், 30 வீரர், வீராங்கனையர் தேர்வு செய்யப்பட உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும், 12 முதல், 18 வயதுடைய வீரர், வீராங்கனையர் மார்ச், 10ம் தேதி காலை, 10 மணிக்கு சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நடக்கும் தடகள போட்டி தேர்வில் பங்கேற்கலாம்.

    இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்"

    Next Story
    ×