என் மலர்
உள்ளூர் செய்திகள்

வருவாய் கோட்டா ட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட காட்சி.
உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
- கடந்த சில மாதங்களாக முறையாக இப்பகுதியில் குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
- கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வசதி பெற்று வந்தனர்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் முக்கோணம் , பூலாங்கிணறு ,ராகல் பாவி, கணக்கம்பாளையம், கணபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பல ஆண்டுகளாக குடிநீர் வசதி பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முறையாக இப்பகுதியில் குடிநீர் வழங்கப்பட இல்லை என கூறப்படுகின்றது.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறைதகவல் தெரிவித்தும் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லாத காரணத்தால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் வருவாய் கோட்டா ட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






