என் மலர்
உள்ளூர் செய்திகள்

குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
- நொச்சிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக 3 குரங்குகள் சுற்றித் திரிகின்றன.
- குரங்குகளைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக 3 குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இவைகள் ஆளில்லாத வீடுகளுக்குள் புகுந்து உணவு தேடி விட்டு, எதுவும் கிடைக்காத நிலையில் வீடுகளில் உள்ள பாத்திரங்கள், துணிகள் உள்ளிட்டவற்றை தூக்கிச் செல்கின்றன.
திடீரென வீடுகளுக்குள் வருவதால் சிறுவர்கள், பெண்கள் அச்சமடைகின்றனர். இதனால் குரங்குகளைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story