search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அல்லாளபுரம் கோவிலில் அம்மன் சன்னதி கட்டும் பணிகள்  மும்முரம்
    X

    அம்மன் சன்னதி கட்டும் பணிகளை படத்தில் காணலாம்.

    அல்லாளபுரம் கோவிலில் அம்மன் சன்னதி கட்டும் பணிகள் மும்முரம்

    • உலகேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்து வருகிறது.
    • உண்ணாமலை அம்மன் சன்னதியை பழைய முறைப்படி மாற்றி அமைக்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்து வருகிறது.கும்பாபிஷேகத்துக்கு முன் உண்ணாமலை அம்மன் சன்னதியை பழைய முறைப்படி மாற்றி அமைக்க வேண்டும் என கோவில் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

    தொல்லியல் துறை கோவில் ஸ்தபதி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.பழைய இடத்தில் ஆய்வு நடத்தியதில் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு புதிய சன்னதி கட்ட அனுமதி கோரப்பட்டது. ஓரிரு நாட்களிலேயே இதற்கான ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து அம்மன் சன்னதி கட்டுவதற்கான கட்டுமான பணிகள் துவங்கியுள்ளன.கோவில் நிர்வாகிகள் கூறுகையில், கேரள பிரசன்னம் பார்த்ததில் அம்மனை சிவனுக்கு வலப்புறமாக, பழைய முறைப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டது.எனவே கும்பாபிஷேகத்துக்கு முன் அம்மன் சன்னதி கட்டுமான பணி நடந்து வருகிறது. பணிகள் முடிந்ததும் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடக்கும் என்றனர்.

    Next Story
    ×