search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அச்சு வெல்லம் உற்பத்தி மையம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்
    X
    கோப்புபடம்.

    அச்சு வெல்லம் உற்பத்தி மையம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்

    • உயர்தரமான அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம் அல்லது திட்ட அறிக்கையில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் தாங்களாக வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கரும்பு விவசாயிகளுக்கு வருவாய் பெருக்கும் வகையில் உயர்தரமான அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் கரும்பு சாகுபடி செய்து வரும் விவசாயிகள் தங்கள் நிலங்களிலேயே மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி செய்யும் வகையில் உயர்தரமான அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைத்துக் கொள்ளலாம்.இதில் விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம் அல்லது திட்ட அறிக்கையில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் 10 அச்சு வெல்லம் தயாரிக்கும் மையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

    எனவே அச்சு வெல்லம் உற்பத்தி மையம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் தேவையான ஆவணங்கள், போட்டோ, ஆதார் அட்டை, நிலச்சிட்டா மற்றும் கரும்பு சாகுபடி செய்வதற்கான இடப் பற்றிய விவரம், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் பெறப்பட்ட கடன், ஒப்படைப்பு கடிதம் ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண் வணிக உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 75488 16636, 86875 40709, 99979 45711, 8610 752985 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×