search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
    X

    கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

    • போதை மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது, மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
    • கருக்கலைப்புக்கு மாத்திரைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பனியன் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இதனால் வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த வாரம் திருப்பூரில் உள்ள மருந்துக்கடைக்கு சென்ற வாலிபர்கள், போதை மாத்திரை கேட்டு கடை உரிமையாளரை தாக்கியதில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தின் எதிரொலியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள மருந்துக்கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டனர். போதை மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

    இதற்கிடையே திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள சில மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி தலைமையிலான மருத்துவ குழுவினர் வீரபாண்டி பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது அதுபோன்ற மாத்திரைகள் விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும் கருக்கலைப்புக்கு தொடர்பான மாத்திரைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    Next Story
    ×