search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கல்விக்கடன் முகாம்
    X

    கோப்புபடம்

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கல்விக்கடன் முகாம்

    • முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடை–பெற உள்–ளது.
    • www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்,

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்க சிறப்பு கல்விக்கடன் முகாம் வருகிற 23-ந்தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

    மாவட்டத்தின் முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

    கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்பத்தின் நகல், மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

    விண்ணப்ப நகல், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கிக்கணக்கு புத்தக நகல், ஆண்டு வருமான சான்று நகல், சாதிச்சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், கல்விக்கட்டண விவரம், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆவணம் போன்றவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.

    இதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கலந்து கொண்டு மாணவர்களின் விண்ணப்பங்களை பெற்று கல்விக்கடன் வழங்க, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உரிய சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு கல்விக்கடன் பெற்று பயன்பெறலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×