search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறையை சரியான முறையில் பின்பற்ற வேண்டும்
    X

    பா.ம.க.வினர் மனு அளித்த காட்சி.

    அரசு கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறையை சரியான முறையில் பின்பற்ற வேண்டும்

    • மாணவர்களுக்கான கல்வி சேர்க்கை உரிய விதிமுறைக்குட்பட்டு நடைபெற வேண்டும்.
    • கல்லூரிகளின் முதல்வர்களை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

    திருப்பூர்

    திருப்பூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மாநில மாணவரணி செயலாளர் பாலு சுப்பிரமணியம் முன்னிலையில் பல்லடம் அரசு கலைக் கல்லூரி .எல் .ஆர் .ஜி. கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முதல்வர்களை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசாணை 161 விதியின்படி மாணவர்களுக்கான கல்வி சேர்க்கை உரிய விதிமுறைக்குட்பட்டு நடைபெற வேண்டும். அதேபோல் மாணவர்கள் சேர்க்கையின் போது இட ஒதுக்கீட்டு முறையை சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    நிகழ்ச்சியின் போது திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் முனைவர் கிரிஷ் சரவணன், மாவட்ட அமைப்பு செயலாளர் மணிகண்ணன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் நந்தகோபால், மாவட்டத் துணைச் செயலாளர் ராஜமாணிக்கம், ஊடகப் பேரவை ரவிசங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், ஒன்றிய தலைவர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், பொங்கலூர் ஒன்றிய செயலாளர் சாமிநாதன், மற்றும் திருப்பூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×