search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாக்கடை கால்வாயில் விழுந்து பள்ளி மாணவன் சாவு
    X

     அபிராம்.

    சாக்கடை கால்வாயில் விழுந்து பள்ளி மாணவன் சாவு

    • பக்கத்து வீட்டில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றுள்ளார்.
    • மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட குழியை பலகையால் மூடி வைத்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் குமாரனந்தபுரம் அருள்ஜோதி புரம் முதல் வீதியைச் சேர்ந்தவர் கனிமொழி (48). இவரது ஒரே மகன் அபிராம் (16). அருகில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பக்கத்து வீட்டில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றுள்ளார். விழாவை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தான்.

    அப்போது திருப்பூர் மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட குழியை சரியாக மூடாமல் பலகையால் மூடி வைத்துள்ளனர்.

    இதனை கவனிக்காத அபிராம் பலகையில் கால் வைத்த போது தவறி சாக்கடை கால்வாயில் விழுந்தார். அப்போது திடீரென அருகில் இருந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரும் பள்ளி மாணவன் மீது விழுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பள்ளி மாணவனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பள்ளி மாணவனின் தாயார் கனிமொழி கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகராட்சி சார்பில் தோண்டப்பட்ட சாக்கடை கால்வாய் குழியில் விழுந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×