என் மலர்
உள்ளூர் செய்திகள்

கழிவுநீர் கால்வாய் வழியாக குடிநீர் குழாய் செல்லும் காட்சி.
பல்லடம் அருகே குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயம்
- வீடுகளுக்கு கழிவுநீர் கால்வாயின் வழியாக குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
- கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அம்மன் நகரில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்குள்ள வீடுகளுக்கு கழிவுநீர் கால்வாயின் வழியாக குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் குடிநீர் குழாய் இணைப்பு மாற்றப்படவில்லை.
இந்த நிலையில் குடிநீர் குழாயில் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டால் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து செல்லக்கூடிய அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






