என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி சங்கமம் குளத்தில் நீர் நிரப்ப கோரிக்கை
    X

    கோப்புபடம்

    அவினாசி சங்கமம் குளத்தில் நீர் நிரப்ப கோரிக்கை

    • குளக்கரைகளில் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவு பொருட்களை கொட்டிச் செல்கின்றனர்.
    • அத்திக்கடவு- அவினாசி திட்டம் செயல்படத் தொடங்கினால் குளத்திற்கு தண்ணீர் நிரப்பபடுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    அவினாசி:

    அவினாசி ராயம்பாளையம் அருகே 250 ஏக்கர் பரப்பளவில் சங்கமம் குளம் உள்ளது. அவ்வப்போது பெய்த மழையால் இக்குளத்தில் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இனி வரும் பருவமழை தொடங்க உள்ளது. அவ்வாறு மழை பெய்யும் சமயம்அத்திக்கடவு- அவினாசி திட்டம் செயல்படத் தொடங்கினால் குளத்திற்கு தண்ணீர் நிரப்பபடுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்த நிலையில் இரவு நேரங்களில் குளக்கரைகளில் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவு பொருட்கள் ஆகியவற்றை டிராக்டர் மற்றும் மினி லாரிகளில் வந்து கொட்டிச் செல்கின்றனர். இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×